சூர்யா மற்றும் சுதா கொங்கரா மீண்டும் இணைகிறார்களா?
Posted on 07/04/2022

நடிகர் சூர்யா திரைப்பயணத்தில் கடந்த சில வருடங்களாக படங்கள் எதுவும் பெரிதாக வெற்றிப்பெறவில்லை. அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் கூட சரியான கலெக்ஷனை பெறவில்லை.
அப்படத்திற்கு முன் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற நிஜ கதையை மையமாக கொண்டு உருவாகி வெளியான இப்படங்கள் பெரிய அளவில் ரீச் ஆனது.
ஆனால் சூரரைப் போற்று திரையரங்கில் வெளியாகி இருந்தால் பெரிய அளவில் கலெக்ஷன் பெற்றிருக்கும் என்பது ரசிகர்களின் வருத்தமாக இருந்தது, இப்படம் ஆஸ்கர் மேடை வரை சென்று வந்தது.
ஜெய் பீம் சில சங்கத்தினரால் எதிர்க்கப்பட்டாலும் மக்களிடம் ரீச் பெற்றது.
தற்போது சூர்யாவின் புதிய படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் மீண்டும் சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படம் யாருடைய வாழ்க்கை வரலாறும் கிடையாதாம்.
ஒரு நிஜ சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Tags: News