மீண்டும் ஜோடி சேரும் விஜய், கீர்த்தி சுரேஷ்!
Posted on 03/01/2018

தமிழ்த் திரையுலகத்தில் தற்போதுள்ள கதாநாயகியரில் முன்னணியில் இருப்பவர்களில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். அறிமுகமாகி சில படங்களில் நடிப்பதற்குள்ளாகவே விஜய் ஜோடியாக கடந்த வருடப் பொங்கலுக்கு வெளியான 'பைரவா' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் இருவரது ஜோடிப் பொருத்தமும் நன்றாகவே இருந்தது. இப்போது மீண்டும் அந்த ஜோடி இணைய உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன்னர் வெளியிடப்பட்டது. "கத்தி, துப்பாக்கி" படங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணி மீண்டும் இணைய, 'உதயா, மெர்சல்' ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய், ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் இணைகிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
Tags: News, Hero, Star