விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது கூட்டணியின் நாயகி
Posted on 16/07/2017

தளபதி விஜய் 'மெர்சல்' படத்தை அடுத்து பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை எனினும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பின்னர் மீண்டும் இணையும் இந்த கூட்டணியின் படத்தின் நாயகி யாராக இருக்கும் என்பதே பலரது கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் ப்ரித்திசிங் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'ஸ்பைடர்' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. 'ஸ்பைடர்' படத்தில் அவருடைய அபார நடிப்பை பார்த்துதான் மீண்டும் அவரை தனது அடுத்த படத்தின் நாயகியாக்க முருகதாஸ் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. முருகதாசின் இந்த முயற்சியால் ஸ்பைடர் படம் விஜய் 62 படத்துடன் கனெக்சன் ஆகியுள்ளது.
Tags: News, Hero, Madurai News, Star