விஜய் தேவரகொண்டா 'லிகர்' வெளியீட்டு தேதி அறிவிப்பு
Posted on 11/02/2021

நடிகர் விஜய தேவரகொண்டா நடிப்பில் தயாராகி இருக்கும் 'லிகர்' படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'நோட்டா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, ' டியர் காம்ரேட்' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கின் முன்னணி நடிகரான இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும் இருக்கின்றனர். இவர் ஹிந்தியில் அறிமுகமாகும் திரைப்படம் 'லிகர்'. இதனை தெலுங்கின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்திருக்கிறார். 'பூமி' பட புகழ் நடிகர் ரோனித் ராய், மூத்த நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டில் பிரபலமான கிக் பொக்சிங் என்ற வீர விளையாட்டையும், காதலையும் இணைத்து உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.