முதல்வரை அடுத்து மத்திய அமைச்சரையும் சந்தித்த வரலட்சுமி
Posted on 14/06/2017

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பெண் திரைப்பட தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த சில கோரிக்கைகளை முன்வைத்தார். மேலும் அவர் ஆரம்பித்துள்ள 'சேவ் சக்தி' அமைப்பு குறித்தும் அவரிடம் விளக்கினார்.
இந்த நிலையில் நேற்று நடிகை வரலட்சுமி மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சௌத்ரியை அவரது அலுவகலத்தில் நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாவட்டந்தோறும் மகளிர் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பெண்கள் தொடர்பான வழக்குகள் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரின் சந்திப்புக்கு பின்னர் செய்தியார்களைச் சந்தித்த வரலட்சுமி கூறியதாவது: தமிழகம் முழுவதும் மகளிர் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சரை கேட்டுக்கொண்டேன். இதனை ஏற்றுக்கொண்ட அவர் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது 5 முதல் 6 மகளிர் நீதிமன்றங்கள் உள்ளன. மாவட்டந்தோறும் ஒரு மகளிர் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று கூறியுள்ளார்.
Tags: News, Hero, Star