ரசிகர்களை கவராத 'துக்ளக் தர்பார்' டீசர்
Posted on 11/01/2021

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் 'துக்ளக் தர்பார்' படத்தின் டீஸர் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாகவே இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'துக்ளக் தர்பார்'. அரசியலை மையப்படுத்திய இந்த படத்தில் கதையின் நாயகனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க, அவருடன் 'புதுமை விரும்பி' பார்த்திபன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பிரேம்குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழுவினர், படத்தின் டீசரை அண்மையில் வெளியிட்டனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பார்த்திபன் நடிப்பில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. இதன் காரணமாக டீஸர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் ஒரு லட்சம் பார்வைகளை கூட எட்டாமல், குறைவான வரவேற்பையே பெற்று வருகிறது.