படப்பிடிப்புடன் தொடங்கிய சூர்யாவின் புதிய திரைப்படம்
Posted on 31/01/2021

நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது.
அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. இந்தப் படத்தில் 'பிக் பாஸ்' பிரபலம் ரம்யா பாண்டியன் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் சின்னத்திரை பிரபலமும், வண்ணத்திரையின் ராசியான நடிகையுமான வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிதுன் மாணிக்கம் என்ற நடிகர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் 'கோடங்கி' வடிவேல் முருகன், செல்வேந்திரன், ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரபல ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, பின்னணி பாடகரும், பாடலாசிரியரும், நடிகருமான கிரிஷ் இசை அமைக்கிறார். இந்த படத்தினை தன்னுடைய சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் மூலம் நடிகர் சூர்யா தயாரிக்கிறார்.
'பிக் பாஸ்' பிரபலமும், புடவையை கவர்ச்சியாக உடுத்தி அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றி, இளைஞர்களின் மனதில் நங்கூரமாய் பதிந்திருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் கதையின் நாயகியாக முதன் முதலாக நடிப்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.