சோனாவுக்கும் கங்கனாவுக்கும் மோதல் வருமா?
Posted on 06/09/2017

தமிழில் “தாம்தூம்” திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்தவர் கங்கனா ரனாவத். “குயின்”படத்தில் நடித்த இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம்வருபவர், கங்கனா ரனாவத். சமீப காலமாக பல சர்ச்சைக்குரிய பேச்சுக்களில் தன்னை முன்னிலைப்படுத்தியுள்ள இவருக்கு பிரபல பாடகி சோனா மகாபத்ரா வெளிப்படையான கடிதம் ஒன்றை டுவிட்டியுள்ளார்.
அதில், "இனிமேலாவது நீங்கள், உங்களுடைய சொந்த வாழ்க்கையை மற்றவர்கள் கேலி செய்யாத அளவில் கண்ணியமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவுரையை கங்கனா எவ்வாறு எடுத்துக் கொள்வார் என்பதில் தான் இது பயனளிக்குமா இல்லையா எனப்து தெரியவரும்...
Tags: News, Hero, Star