பாடகி ராஜலக்ஷ்மியின் அதிரடி முடிவு!
Posted on 11/08/2022

ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் நாளை வெளியாகிறது.
இப்படத்தில் இடம்பெறும் மதுர வீரன் பாடலை அதிதி ஷங்கர் தனது சொந்த குரலில் பாடியுள்ளார். இப்பாடலை முதன் முதலில் பாடியது பின்னணி பாடகி ராஜலக்ஷ்மி தானாம்.
ஆனால், அதன்பின் அவர் பாடியதை எடுத்துவிட்டு, அதிதி ஷங்கரை பாடவைத்துள்ளனர். இந்த செய்தி வெளிவந்த பிறகு அதிதி ஷங்கரின் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், இந்த அணைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாடகி ராஜலக்ஷ்மி. ஆம், அதிதி ஷங்கர் பாடியது குறித்து முதல் முறையாக பேசியுள்ளார்.
"மதுர வீரன் பாடலை நான் பாடியது உண்மை தான். அதிதி நல்ல பாடுறாங்க. அதனால பாட வெச்சிருக்காங்க. எனக்கு நியாயம் கேட்பதாக நினைத்துக்கொண்டு அதிதியை விமர்சனம் செய்ய வேண்டாம். அதிதியை விமர்சனம் செய்வது வருத்தமா இருக்கு" என்று கூறியுள்ளார்.
Tags: News