ரஜினியின் பாராட்டில் மேயாத மான்!
Posted on 25/10/2017

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சுனாமியில் தப்பித்த ஒரே படம் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான 'மேயாத மான்'. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சென்னை உள்பட பெருநகரங்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் திரையுலக பிரமுகர்களின் பாராட்டுக்களை பெற்ற இந்த படத்தை நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து, 'நல்ல பொழுதுபோக்கு காமெடி படம்' என்று படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
ரஜினியின் பாராட்டுக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.
Tags: News, Hero, Star