மெர்சலால் நடிகர் விஷால் அலுவலகத்தில் ரெய்டு!
Posted on 23/10/2017

நடிகர் விஷாலுக்கு சொந்தமான அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது. திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 மணி நேரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பட நிறுவனத்தின் கணக்குகள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திரைப்பட நிறுவன கணக்கு வழக்குகள் குறித்தும் அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர்.
விஷாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விஜய்யின் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Tags: News, Hero, Star