பிரேம்ஜி ஸ்டைலில் விஜய்! நன்றி கூறிய பிரேம்ஜி!
Posted on 20/10/2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'மெர்சல்' திரைப்படம் தீபாவளியன்று வெளிவந்து வசூலைக் குவித்து வருகிறது. இப்படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 'மெர்சல்' படம் 'அபூர்வ சகோதரர்கள்', 'மூன்று முகம்', 'கஜினி' உள்பட பல படங்களின் கலவையாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். புதிதாக எந்தக் காட்சியும் இல்லை எனவும் சமூக வலைதளங்களில் பரவலாகக் கூறப்பட்டு வருகிறது.
இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நித்யா மேனனிடம் அவருடைய அழகை, தன் கைவிரல்களால் வார்ணிப்பார் 'தளபதி' விஜய். அப்போது பிரேம்ஜி அமரனின் ஃபேவரிட் மேனரிச ஸ்டைல் போல வருகிறது.
இதைத் தன்னுடய ப்ரொஃபைல் புகைப்படமாக பிரேம்ஜி ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளார். மேலும் என் ஸ்டைலை தளபதி உபயோகித்ததற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் வேண்டுமென்றே விஜய் பிரேம்ஜி ஸ்டைலை குறிப்பிட்டது போலவும் தெரியவில்லை.
Tags: News, Hero, Star