பூஜையுடன் துவங்கியது “பிசாசு 2” இயக்குநர் மிஷ்கினின் புதிய திரைப்படம்!
Posted on 14/12/2020

தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படம் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக செய்தி வெளியானது.
‘சைக்கோ’ வெற்றிக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு வெளியான முதலே பலரின் எதிர்பார்ப்பை இப்படம் கூட்டியுள்ளது.
நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிகின்றார்.
இன்று ‘பிசாசு 2’ பட வேலைகள் இனிதே பூஜையுடன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் வேலைகள் திண்டுகல்லில் இன்று துவங்கியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். மேலும் சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணா இந்த படத்தில் இணைந்துள்ளார்.
தயாரிப்பு - T.முருகானந்தம் (ராக்போர்ட் என்டர்டைன்மென்ட்)
எழுத்து இயக்கம் - மிஷ்கின்
இசை - கார்த்திக் ராஜா
க்ரியேடிவ் புரொடுயுசர் - K.B.ஶ்ரீராம்
தயாரிப்பு மேற்பார்வை - L.B. ஶ்ரீகாந்த் லக்ஷ்மணன்
பப்ளிசிட்டி டிசைன்ஸ் - கண்ணதாசன்