ஜீவன் நடிக்கும் 'பாம்பாட்டம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Posted on 11/12/2020

நடிகர் ஜீவன் நடிப்பில் தயாராகி வரும் 'பாம்பாட்டம் 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
'காக்க காக்க' என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஜீவன். 'திருட்டுப்பயலே', 'நான் அவனில்லை', 'அதிபர்' ஆகிய படங்களில் நடித்திருக்கும் இவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் படம் 'பாம்பாட்டம்'. இப்படத்தை இயக்குனர் வீ சி வடிவுடையான் இயக்கி இருக்கிறார்.
இந்தப்படத்தில் ஜீவனுடன் ரித்திகாசன், யாஷிகா ஆனந்த், மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, அம்ரேஷ் இசை அமைத்திருக்கிறார்.
பாம்பை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த பிரீயட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது. இதற்கு பரவலான ஆதரவு கிடைத்து வருகிறது.