காதலனுடன் பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாரா
Posted on 19/11/2018

நயன்தாரா, தனது பிறந்த நாளை விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன் என எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார். மேலும் அலங்கரிக்கப்பட்ட கேக்கின் ‘மீது ‘தங்கமே’ என்ற பெயர்ப் பலகையும் இடம் பெற்றிருந்தது.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த செய்தி எனினும், இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இருவரும் அதை மறுக்காத நிலையில் ஜோடியாக புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் வருகின்றனர்.
Tags: News, Hero