நடிகர் சிம்புவிற்கு திருமணம்.. கல்யாண பொண்ணு யார் தெரியுமா?
Posted on 21/03/2022

உங்களுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று பலரும், நடிகர் சிம்புவிடம் கேட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் கூட, பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வந்த சிம்புவிடம், போட்டியாளர் தாமரை, எப்போ திருமணம் என்று கேள்வி எழுப்பினார். அதற்கும் சிம்பு, சில பதில்களை கூறி, வழக்கம் போல் சமாளித்துவிட்டார்.
சமீபத்தில், நடிகர் சிம்பு, பிரபல நடிகை நிதி அகர்வாலை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது, சிம்பு - நிதி அகர்வாலின் காதலுக்கு சிம்புவின் குடும்பம் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால், விரைவில் சிம்பு - நிதி அகர்வால் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: News, Hero, Lifestyle