லெஜெண்ட் சரவணன் நடிக்கும் லீடர் படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு!

Leader Pre Release Event

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம்  தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது.

பாடலாசிரியர் விவேகா பேசுகையில், "இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள‌ முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது.
 
லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரிடம் நீங்கள் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டபோது "எங்க அப்பா ஒன்னு சொல்லி இருக்கிறார், எல்லோருக்கும் முன்னாடி கடைக்கு செல்ல வேண்டும், எல்லோருக்கும் பின்னாடி கடையை விட்டு வெளியில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார், அதை நான் பின்பற்றுகிறேன், அதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்," என்றார். இதுதான் வியாபார உலகின் பைபிள். அந்த கருத்தை அவர் சொன்னதும் மிகப் பெரிய அளவில் வைரலானது. அது தான் அவர் வெற்றியின் ரகசியம், இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்," என்றார்.
 
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், "நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் முதன்மையான காரணம். இந்த திரைப்படத்தில் அப்பா-பொண்ணு சம்பந்தப்பட்ட ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். நான்கு பேர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற, நினைக்கும் ஒவ்வொருவரும் லீடர் தான். ஏற்கனவே லெஜெண்ட் சரவணன் நிஜமான லீடர் தான். நீங்கள் ரியலாக ஒரு லீடராக இருந்து கொண்டு. திரையிலும் லீடராக நீங்கள் தோன்றுவதை நாங்கள் வரவேற்கிறோம், எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.
 
இதனை மறைந்த வாலி ஐயா பாணியில் வாழ்த்திட வேண்டும் என்றால்.. "உங்களுக்கு யாரும் போட்டதில்லை ஆர்டர், உங்களுக்கு நீங்களே தான் பார்டர்,  என்றும் சோர்ந்ததில்லை உங்களுடைய ஷோல்டர், ஏனென்றால் நீங்கள் தான் உண்மையான லீடர்..." லீடர் -கண்டிப்பாக வின்னர்," என்றார்.  
 
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், "லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர் தான்.‌ பல கதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும் போது தெரிந்து கொண்டேன். பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்... அவர் என்னிடம் புரூஸ்லீயின் கதை ஒன்றை சொன்னார், அந்த கதையில் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தயார் படுத்திக் கொள்வேன் என்று சொன்னார். அப்போது அவரை அழைத்துக் கொண்டு மிகப்பெரிய இயக்குந‌ரிடம் சென்று அது போன்ற ஒரு படத்தை உருவாக்குங்கள் என்ற பேச்சுவார்த்தையலும் ஈடுபட்டேன். அவருடைய எண்ணமும் பணியும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்," என்றார்.  
 
தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், "லெஜெண்ட் சரவணனின் முதல் படத்தை பார்த்தேன், மிக பிரம்மாண்டமானதாக இருந்தது. அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். எங்கள் நிறுவனத்தில் 'பட்டாசு' படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தான் லீடர் படத்தை இயக்குகிறார், அதில் லெஜெண்ட் சரவணன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் மிகப்பெரும் வெற்றியைப் பெறும், வெற்றி விழாவில் சந்திப்போம்," என்றார்.
 
இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில், "இங்கு வருகை தந்திருக்கும் லெஜெண்ட் சரவணனின் ரசிகர்களை பார்க்கும்போது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நான் உதவி இயக்குந‌ராக இருந்தபோது லெஜெண்ட் சரவணனின் தந்தையை 1988ம் ஆண்டில் சந்தித்திருக்கிறேன். அந்த காலத்தில் உதவி இயக்குந‌ர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பார்கள். அவருடைய கடைக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். நூறு ரூபாய்க்கு கீழ் 99 ரூபாய்க்கு அவர்கள் ஒரு சட்டையை விற்பனை செய்வார்கள். நூறு ரூபாய் கிடைத்தவுடன் அந்த சட்டையை வாங்கலாம் என்பதற்காக அடிக்கடி அந்த கடைக்கு சென்று பார்த்து விட்டு வருவோம், ஒரு முறை தீபாவளி தருணத்தில் 500 ரூபாய் கொடுத்தார்கள், அதை எடுத்துக்கொண்டு சட்டையை எடுக்கலாம் என்று கடைக்கு சென்றோம். அன்றைய காலகட்டத்தில் 500 ரூபாய்க்கு குடும்பத்தினர் அனைவருக்கும் சட்டையை எடுக்க முடியும் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸில் மட்டும் தான் முடியும். அந்த தருணத்தில் நான் என் அப்பாவுக்கு என் தம்பிக்கு தங்கச்சிக்கு டிரஸ் எடுத்தேன்.‌ நான் பார்த்து வைத்திருந்த சட்டையில் விலையில் மாற்றம் இருந்தது. பில் 590 ஆக இருந்தது என்னிடம் ₹500 மட்டும் தான் இருந்தது. அப்போது மீதி பணத்தை எப்போது உங்களிடம் இருக்கிறதோ அப்போது தாருங்கள் என்று சொன்னார். நூறு ரூபாய் சட்டை வாங்குபவர்களுக்கும் அவர் ஒரே மரியாதை தான் வழங்கினார், லட்ச ரூபாய்க்கு சட்டையை வாங்கியவர்களுக்கும் அவர் அதே மரியாதை தான் வழங்கினார், வாடிக்கையாளரை மதித்த முதலாளியாக அவர் இருந்தார். அதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.
 
அதே போல் இந்த படம் குறித்த அறிவிப்பை பார்த்தவுடன் நான் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு போன் செய்தேன். அவர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். அவரிடம் இதை வெற்றிப் படமாக இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.‌ அதன் பிறகு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எனக்கு அனுப்பினார் இயக்குந‌ர். அதை பார்த்ததும் பாராட்டினேன்.  
 
நேர்மை, குறைந்த லாபம், நிறைய வாடிக்கையாளர்கள்... இதுதான் லெஜெண்ட் சரவணனின் வெற்றிக்கான தாரக மந்திரம். சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் நிறைய படங்களை லெஜெண்ட் சரவணன் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எங்கள் சினிமாவிற்கு நிறைய தயாரிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள், உங்களைப் போல், உங்கள் அப்பா வணிக துறையில் எப்படி சாதனை படைத்தார்களோ அதே போல் நீங்கள் திரைத்துறையிலும் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும். 50 அல்ல 100 படங்கள் கூட எடுத்திட வேண்டும், தயாரித்திட வேண்டும், சினிமா மற்றும் சினிமா தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும்," என்றார்.
 
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், "லெஜண்ட் சரவணன் சார், நீங்கள் வணிக உலகத்தில் மட்டும் அல்ல, இப்போது தமிழ் சினிமாவிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம். 'லீடர்' என்ற தலைப்போடு நீங்கள் வருவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சினிமாவிற்கான ஆர்வமும் அர்ப்பணிப்பும் உங்களிடம் தெளிவாக தெரிகிறது. வணிகத்தில் இவ்வளவு பெரிய சாதனை செய்த நீங்கள், அதே உறுதியுடன் சினிமாவிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. குறிப்பாக, இயக்குநர் துரை செந்தில்குமார் அவர்களுடன் உங்கள் கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவருடைய படங்கள் எப்போதும் மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும்.  அதுபோல இந்த 'லீடர்' படமும் பெரிய வெற்றி பெறும். இந்தப் படம் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ்சினிமாவில் அப்பா-மகள் உணர்வுகளை மையமாகக்கொண்ட படங்கள் எப்போதும் மக்களின் மனதைத் தொடும். 'தெறி', 'விஸ்வாசம்' போன்ற படங்கள் அதற்குச் சிறந்த உதாரணம். அதுபோல, 'லீடர்' படமும் உணர்ச்சி மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஜிப்ரான் அவர்களின் இசையும் பின்னணி இசையும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். டிரெய்லரிலேயே அது தெளிவாக தெரிகிறது. மேலும், இந்தப்படத்தின் விளம்பரத்தை சிறப்பாக முன்னெடுத்து வரும் நிகில் முருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சரவணன் சார், உங்கள் சினிமா பயணத்தில் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில், தரமான படங்களை வழங்க வேண்டும். தமிழ் சினிமாவிற்கு நீங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களைகொடுக்க வேண்டும் என்பதே எங்களின் வாழ்த்து. 'லீடர்' படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்றார்.
 
நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில், "லீடர் என்கிற வார்த்தை யாருக்கு பொருந்தும் என்றால் எப்போதும் தன்னை மட்டுமே பெருமிதமாக பெருமைப்படுத்தி கொள்ளாமல் உடன் இருக்கும் அனைவரையும் பெருமைப்படுத்தும் மனிதர்கள் தான் லீடர். நான் எப்போது லெஜெண்ட் சரவணனின் கடைக்கு சென்றாலும் எங்களை அமர வைத்து "நிறைய படங்களில் நடிக்க வேண்டும், நன்றாக நடிக்க வேண்டும், நிறைய மேடைகளில் உங்களை பார்க்க வேண்டும்" என்று ஒவ்வொரு முறையும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். நிறைய கலைஞர்களை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர் லெஜெண்ட் சரவணன் ஐயா அவர்கள்.
 
இந்தப் படம் வெளியான பிறகு ஆறு மாதம் வரை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு செல்ல முடியாது. ஏனெனில் இந்தப் படத்தில் அவரை திட்டுவது போன்ற காட்சியில் நடித்திருக்கிறேன். அதை நானாக சொல்லவில்லை இயக்குந‌ர் எழுதிக் கொடுத்ததை தான் பேசி நடித்தேன். இந்தப் படத்தில் என்னுடைய கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அதேபோல் படத்திலும் அமைதியாக இருக்கிறார்.
 
உணவுகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் மாமனிதர் இவர், இவரை ஏன் நாங்கள் லீடர் என்று சொல்கிறோம் என்றால் அவருடைய பிறந்த ஊருக்கு ஊரில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு நாங்கள் எல்லாம் சென்றபோது, அந்த ஊருக்கே அவர் சாப்பாடு போடுகிறார். அங்கு நடைபெற்ற எல்லா படப்பிடிப்பு நாட்களிலும் ஊர் முழுவதும் இவர் விருந்து படைத்தார்," என்றார்.
 
பேபி இயல் பேசுகையில், "இப்படத்தில் நான் சிரித்தேன், அழுதேன், கோபமாக இருந்தேன், சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷ் எங்கள் அப்பா நடித்த 'டிக் டிக் டிக்' படத்தில் பணியாற்றியவர். அவரைப் பற்றி என் அப்பா லக்கி கேமராமேன் என சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்ததால் நான் என்னை லக்கியாக ஃபீல் செய்கிறேன்.
 
படப்பிடிப்பின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. நாங்கள் நல்ல மழையில் சிக்கிக்கொள்ளும் போது எங்களை லெஜெண்ட் அங்கிள் காப்பாற்றுவது போல் காட்சி இருந்தது அந்த காட்சி படமாக்கப்படும் போது அவர் கால் இடறி விழுந்துவிட்டார், இருந்தாலும் பேலன்ஸ் செய்து எங்களை காப்பாற்றினார். அந்த ஒரு நொடி எனக்கு மினி ஹார்ட் அட்டாக் வந்தது போல் இருந்தது. அப்போது என் நினைவில் இருந்த டயலாக் எல்லாம் மறந்து விட்டது. அவருடைய பெஸ்ட் ஹார்ட் வொர்க் தான் ட்ரெயினில் நடக்கும் ஃபைட் சீன். ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீங்க அங்கிள் எனச் சொன்னேன்," என்றார்.
 
நடிகர் ஷாம் பேசுகையில், "கருடன் படத்தை பார்த்த பிறகு என் நண்பர்களிடம் இந்தப் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையை பகிர்ந்து கொண்டேன். அந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாக கையாண்டிருக்கிறார் இதை சொன்ன சில நாட்களில் இயக்குந‌ர் துரை செந்தில் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது, பிறகு சந்திப்பு நடந்தது. அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை, ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க இயக்குந‌ர் அவர். அவர் இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் ஒரு கமர்ஷியல் வேல்யூவும் இருக்கும், அழகான மெசேஜும் இருக்கும் சினிமா பிளாட்பார்மை மிக தரமாக பயன்படுத்திக் கொள்பவர்களில் துரை செந்தில்குமார் முக்கியமானவர்.‌
 
இந்தப் படத்திற்காக டப்பிங் பேசும்போது எல்லா கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார். இதுதான் எனக்கு வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார்.‌ இதை இங்கு யாரும் செய்ய மாட்டார்கள்.‌
 
எல்லோரும் லெஜெண்ட் சரவணனின் மற்றொரு முகத்தை பார்த்திருக்க மாட்டார்கள், படப்பிடிப்பு தளத்தில் நான் அவருடன் பணியாற்றிய காட்சிகளில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன்.‌ வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார். அவருக்கு இது இரண்டாவது படம், நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து இருப்பார், நிறைய படங்களில் நடிப்பார். அவருடைய தயாரிப்பு மூலம் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் போன்றதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை," என்றார்.
 
நடிகர் வி டி வி கணேஷ் பேசுகையில், "லெஜெண்ட் சரவணன் உடன் நடிக்க வேண்டும் என்று இயக்குந‌ர் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் எனக்கு அவரையும் அவருடைய நடிப்பையும் மிகவும் பிடிக்கும். அவர் நிறைய பேரை வசீகரித்திருக்கிறார். அப்போதெல்லாம் இந்த மனிதர் எப்படி இவ்வளவு பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துகிறார் என வியப்புடன் பார்த்துக் கொண்டே இருப்பேன்.  
 
யாரிடம் வேண்டுமானாலும் பணம் இருக்கலாம் ஆனால் சினிமா மீதான பற்றும் ஆர்வமும் இருந்தால்தான் நடிக்க முடியும்.  ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி இருந்தால்தான் நடிக்க முடியும் இது எல்லோருக்கும் வராது.‌ அதனால் தான் சொல்கிறேன் சாதனையாளர் என்றால் அது லெஜெண்ட் சரவணன் தான். எனக்குத் தெரிந்து இந்த திரைப்படம் வெளியாகி  500- 600 கோடி வசூலிக்கும். மற்ற மொழிகளிலும் வெற்றி பெற்றால் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும்," என்றார்.
 
இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், "நம்ம லெஜெண்ட் சரவணன் பற்றிப் பலரும் பேசும்விதத்தை நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொருவரும் அவரைப் பற்றி பாராட்டி  பேசினார்கள். அதிலிருந்து எனக்கு தெளிவாக புரிந்தது என்னவென்றால், அவர் நினைத்ததை தைரியமாகச் செய்து முடிப்பவர், யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னம்பிக்கையுடன் முன்னேறுவது அவருடைய தனித்துவம்;

Tags: News, Hero, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top