கமலுக்காக இயக்குனருடன் மோதிய நடிகர்!
Posted on 07/11/2017

ஆர்.கே. நகர் டீஸரை பார்த்த நடிகர் கயல் சந்திரன் கோபம் அடைந்து வெங்கட் பிரபுவுடன் ட்விடட்ரில் மோதியுள்ளார். வெங்கட் பிரபு தயாரிப்பில் பைவப் நடித்துள்ள ஆர்.கே. நகர் படத்தின் டீஸர் வெளியானது. அதில் நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுடுவாங்களா என்ற வசனம் வந்துள்ளது. இதை பார்த்த கயல் சந்திரன் கமல் ஹாஸனை தான் கிண்டல் செய்துள்ளார்கள் என்று கோபம் அடைந்துள்ளார்.
டீஸரை பார்த்த கயல் சந்திரன் ட்வீட்டியிருப்பதாவது, வெங்கட் பிரபு அண்ணா டீஸரை பார்க்கும் வரை உங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருந்தேன். இது ரொம்ப ஓவர். இது பெரும் அதிருப்தி அளிக்கிறது என்றார்.
சந்திரனின் ட்வீட்டை பார்த்த வெங்கட் பிரபுவோ, ப்ரோ நாளை பேசலாம். தயவு செய்து எந்த முடிவுக்கும் வராதீங்க என்று கமெண்ட் போட்டுள்ளார். ஆர்.கே. நகர் டீஸரை வெளியிட்டுவிட்டு வெங்கட் பிரபு உலக நாயகனுக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தானும், கமலும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
அந்த பக்கம் வாழ்த்துக்கள்? #rknagarteaser இப்போ சமாதானமா? என்று காட்டமாக கேட்டுள்ளார் கயல் சந்திரன்.
Tags: News, Hero, Star