ரஜினியின் படத்தை விட அதிக விலைக்கு விற்கப்பட்ட கமலின் விக்ரம் திரைப்படம்!
Posted on 11/05/2022

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் ககனராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.
இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர், சிறந்த நடிகர்கள் ஒன்றாக நடித்துள்ள இப்படத்தை அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளது. அதன்படி இப்படத்தின் சிங்கிள், ட்ரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் வரிசையாக வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படம் கேரளாவில் மட்டும் ரூ. 7 கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடைசியாக வெளியான ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Hero