சிரஞ்சீவியுடன் இம்முறையாவது ஜோடி சேர்வாரா அனுஷ்கா?
Posted on 29/01/2017

தமிழில் சூர்யாவுடன் சிங்கம்-3, தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் ஓம் நமோ வெங்கடேஷாய, இவ்விரு படங்கள் போக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் உருவாகும் பாகுபலி-2 என அனுஷ்கா நடிப்பில் இவ்வருடம் மூன்று படங்கள் திரைக்கு தயாராகி வருகின்றது. மேலும் பாஹ்மதி எனும் சரித்திர படத்திலும் அனுஷ்கா நடித்து வருகின்றார். சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தில் நாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் முதலில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
ஆனால் பாகுபலி-2 படத்தில் அனுஷ்கா பிசியாக இருந்ததால் சிரஞ்சீவியின் 150வது படத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை. காஜல் அகர்வால் கைதி நம்பர் 150 படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் சிரஞ்சீவி படத்தில் நடிக்க அனுஷ்காவிற்கு வாய்ப்பு வந்துள்ளது.
இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருக்கும் 151வது படத்தை அவரது மகன் ராம் சரண் தயாரிக்கவுள்ளார். அப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Tags: News, Hero, Star