நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர் ஹேமந்தே காரணம்!
Posted on 15/12/2020

கடந்த டிசம்பர் 8ம் தேதி வரை சிரித்து மகிழ்ந்து ஆட்டம்-பாட்டம் என ஜாலியாக இருந்தவர் நடிகை சித்ரா. ஆனால் டிசம்பர் 9ம் தேதி அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தும் வகையில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
இன்றும் அவரா இப்படி ஒரு செயலை செய்தார் என பிரபலங்கள் ஷாக்கில் தான் உள்ளனர். இந்த நிலையில் அவரது மரணத்திற்கு காரணம் ஹேமந்த் தான் என செய்தி வந்துள்ளது.
தொலைக்காட்சி தொடரில் சித்ரா நெருக்கமாக நடிக்க அதற்கு கணவர் ஹேமந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 9ம் தேதி அதுகுறித்து வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் செத்து தொல என ஹேமந்த் கூறி அறையை விட்டு வெளியேறிய போது சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.