பைரவா விஜய்யுடன் நடித்த அனுபவம் - ஹரிஷ் உத்தமன்
Posted on 11/01/2017

இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கிய 'பைரவா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. பொங்கல் பண்டிகையை இரண்டு நாட்களுக்கு முன்பே கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர் ஹரிஷ் உத்தமன் விஜய்யுடன் நடித்தது குறித்து சமீபத்தில் கூறியுள்ளார். "நான் டுவிட்டரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்றேன். ஆனால் விஜய் நடிக்கும் 'பைரவா' படத்தில் முதல் நாள் படப்பிடிப்பு முடித்தவுடன் விஜய்யுடன் நடிக்கின்றேன் என்று போட்ட ஒரு பதிவுக்குத்தான் அதிகபட்ச லைக்குகளும், ரீடுவிட்டுகளும் கிடைத்தது.
விஜய்யுடைய ஸ்டேட்டஸ் வேற லெவலில் இருந்தாலும் அவருடன் நடிக்கும்போது அவர் மிக எளிமையாக இருந்ததால் எந்தவித பயமும் இன்றி நடித்தேன்" என்று கூறியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Hero, Lifestyle, Star