ஐம்பது நாட்களை வெற்றியுடன் கடந்தது “மாஸ்டர்”!
Posted on 03/03/2021

கடந்த ஆண்டு இதே மார்ச் மாதம் தான் தியேட்டர்களுக்கு பெரிய பூட்டாக போடப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தான் அந்த சங்கிலியை தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பலமாக உடைத்தது.
கடந்த பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த மாஸ்டர் திரைப்படம் 50வது நாளை திரையரங்குகளில் கடந்ததை ரசிகர்கள் #Master50Days என்கிற ஹாஷ்டேக் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டன. தீபாவளிக்குத் தான் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், பெரிய படங்களான சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் உள்ளிட்டவை ஒடிடி தளங்களிலேயே வெளியாகின. சின்ன படங்கள் வெளியானாலும் தியேட்டர்களுக்கு மக்கள் செல்ல விரும்பவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களை தியேட்டருக்கு வரவழைத்தது.
மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, மாஸ்டர் மகேந்திரன், சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.