ஜெய் நடிக்கும் 'எண்ணித் துணிக' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Posted on 23/02/2021

நடிகர் ஜெய் நடிப்பில் தயாராகிவரும் 'எண்ணித் துணிக' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
'ஜிந்தா', பிரஷாந்த் நடிப்பில் வெளியான 'ஜானி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் கே வெற்றிசெல்வன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதியதிரைபடம் 'எண்ணித் துணிக'. இந்த படத்தில் நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடிக்கிறார். இவர்களுடன் வம்சி கிருஷ்ணா, அஞ்சலி நாயர், சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜே பி தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார்.