விஜயை இயக்கவேண்டுமென்று சினிமாவுக்கு வந்தவன் நான்: இயக்குநர் அட்லீ பேச்சு!
Posted on 11/06/2017

அட்லீ இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் விஜய். மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கின்றனர். பெயரிடப்படாத இந்த படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து நேற்று நடந்த ஒரு விருது விழாவில் விஜய், அட்லீ இருவரும் கலந்துகொண்டனர். மேடையில் பேசிய அட்லீ நான் டைரக்டரா பேசணும்னா. கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. நான் அடிப்படையாகவே தளபதி ரசிகன். அவரை வைத்து படம் பண்ணியாகணும் என்று சினிமாவுக்கு வந்த ஆள் நான்.
தளபதியை எப்படி பார்க்கணும்னு நெனச்சனோ அப்படி ஒரு படம் பண்ணும்போது அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது. ஒரு இயக்குனராக சில விஷயங்கள் சொல்ல கூடாது. ஆன தளபதி ரசிகனா பார்த்தா முடியாது. எப்படா படத்தை பார்ப்போம் என்ற ஏக்கம் எனக்கும் இருக்கு. கூடிய சீக்கிரத்தில் படம் வெளியாகும் என கூறினார் இயக்குநர் அட்லீ.
Tags: News, Hero, Star