என்ன ஃபீலிங்கா இல்ல ஃபீலிங்கான்னு கேக்குறோம்...
Posted on 03/10/2017

பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் மகிழ்ச்சியில் உள்ளார். ஓவியாவால் தான் அவர் டைட்டிலை வென்றார் என்று சிலர் கூறி வருகிறார்கள். ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து ஆரவ் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி நடக்கும் என்று நினைத்து தான் சென்றேன். ஆனால் அப்படி இல்லை. நாங்களே சமைத்து சாப்பிட்டு, நாங்கள் எடுத்து சென்ற உடைகளை உடுத்தினோம். சிறப்பு தருணங்களில் மட்டுமே பிக் பாஸ் உடை தந்தார்.
பிக்பாஸ் வீட்டில் பொறுமையை சோதித்தனர். அது தான் நிகழ்ச்சியின் குறிக்கோள். கடைசி சில வாரங்கள் கொடூரமாக இருந்தன. டாஸ்க்குகள் கடினமாக இருந்தன. பிக்பாஸ் வீட்டில் இருந்த பலர் வாக்குகளுக்காக போலியாக நடித்தனர். ஆனால் நானும் அப்படி செய்ய விரும்பவில்லை. வாக்குகளுக்காக மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. மக்கள் தன்னை பார்த்து பரிதாபப்பட வேண்டும் என்று சுஜா வருணி நடித்தார். அவர் எப்பொழுதுமே போலியாக இருந்தார். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்தார்.
ஓவியா பிரபலமான நடிகை. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முக்கியமாக அவர் ஒரு பெண். அதனால் எனக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை அவருக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பிக்பாஸ் வீட்டில் இருந்த பலரை காட்டிலும் ஓவியா நல்லவர். அவர் செய்த விஷயங்கள் மற்றவர்களை எரிச்சல் அடைய செய்ததால் வாராவாரம் அவர் நாமினேட் செய்யப்பட்டார்.
ஓவியா விஷயத்தை நான் ஒழுங்காக கையாண்டிருக்கலாம். அன்று நான் அவரை புறக்கணித்திருக்கக் கூடாது. ஓவியாவிடம் நான் பொறுமையாக இருந்திருக்கலாம். பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களில் நான் தான் அவரின் பெஸ்ட் ஃபிரெண்ட். நான் அவரை அவமதித்தது தப்பு என்றார் ஆரவ்.
Tags: News, Hero, Star