மெகா வெற்றிக்கு ஆரியின் தந்திரம்!
Posted on 05/03/2021

ஷங்கர் தயாரிப்பில், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, அஞ்சலி நடித்த ரெட்டை சுழி படத்தின் மூலம் அறிமுகமானவர், ஆரி அர்ஜூனன். அவரது மூன்றாவது படமான நெடுஞ்சாலை படத்தில் ஆரியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
பகவான் படம் திருவண்ணாமலை அருகில் உள்ள செஞ்சி கோட்டையில் படமாக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் ஆரியின் தோற்றம் பலரையும் கவர்ந்ததாக இருந்தது.
தற்போது இந்த படத்தில் தனது கேரக்டரின் பெயர் ஜோசப் விஜய் என்ற ரகசியத்தை ஆரி வெளியிட்டுள்ளார். இதனால் இந்த படம் விஜய் ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை கலிங்கன் எழுதி, இயக்கி உள்ளார்.