விஜயின் 'மாஸ்டர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Posted on 29/12/2020

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் 'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. விஜயுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் சாந்தனு மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படம் வெளியீட்டுக்கு தயாராகி பல மாதங்களாகிறது.
கொரோனா தொற்றிற்குப் பிறகு ரசிகர்கள் பட மாளிகைக்கு வருகை தருவது குறைந்திருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களை பட மாளிகைக்கு வரவழைக்க தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கைகொடுக்கும் என திரையுலக வணிகர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று 'மாஸ்டர் ' படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் , இந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே தருணத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தளபதி விஜயின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.