அனிருத் கனவு நனவானது!
Posted on 01/03/2018

இளம் இசைப்புயல் அனிருத் விஜய், அஜித் உள்பட அனைத்து முணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துவிட்ட நிலையில் அவருடைய அடுத்த கனவு சூப்பர் ஸ்டார் ரஜினி படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பதாக இருந்தது.
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த பிரமாண்டமான படத்தில் அனிருத் இணைந்துள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
Tags: News, Hero, Star