துரந்தர் பழிவாங்கல் படத்தின் முன்பதிவு தொடக்கம்!
Posted on 14/03/2026
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நாடறியாத ரகசிய மனிதர்களின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் துரந்தர் பழிவாங்கல் . இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இது இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப் பெரிய ஓப்பனிங் வசூலை குவிக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம், ஸ்டைலான ஆக்ஷன், விறுவிறுப்பான டிராமா மற்றும் உளவுத்துறையின் ரகசியங்கள் என ரசிகர்கள் இதுவரை திரையில் பார்த்திராத ஒரு புதுமையான மற்றும் பிரமிக்க வைக்கும் திரையரங்க அனுபவத்தை கொடுக்கக் காத்திருக்கிறது. ரன்வீர் சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த ஸ்பை-ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், பழிவாங்கலை மையமாக கொண்ட ஒரு வெறித்தனமான கதையோடு, அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் ரசிகர்களின் நாடி நரம்பை எகிற வைக்க உள்ளது.
அவருடன் இணைந்து ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. குறிப்பாக, மிகச் சிறந்த வியூகங்களை வகுக்கும் அஜய் சன்யால் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர். மாதவனும், அச்சுறுத்தும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பால் கதாபாத்திரத்தில் அர்ஜுன் ராம்பாலும், அதிகாரமிக்க எஸ்பி சௌத்ரி அஸ்லாம் என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத்தும் நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணி படத்தின் விறுவிறுப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
Tags: News, Hero, Lifestyle