திருட்டுப்பயலே 2-வில் அறிமுகமாகும் நயனா!
Posted on 28/11/2017

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் "திருட்டுப்பயலே 2".
இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே.
இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார். நயனா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உலகமெங்கும் திருட்டுப்பயலே 2 திரைப்படம் நவம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.