வில்லியாகும் மன்மத நாயகி!
Posted on 02/09/2017

இந்தி திரைப்பட நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளருமாக மந்திரா பேடி பிரபாஸ் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளிவரவிருக்கும் 'சாஹோ' திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
1994ம் ஆண்டு சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி, பின் 1995ம் ஆண்டு சக்கைப் போடு போட்ட 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயெங்கே' திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல இந்தி படங்கள், ஐசிசி உலக கோப்பையின் நிகழ்ச்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் என பிசியாகவே வலம் வந்த மந்திரா தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பிரபாஸ், சாரதா கபூர், அருண் விஜய் போன்றவர்களின் கூட்டணியில் வெளிவரவிருக்கும் 'சாஹோ' திரைப்படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சில சண்டை காட்சிகளோடு முதற்கட்ட படிப்பிடிப்பை ஐதரபாத்தில் முடித்திருக்கும் இந்த 45 வயது நடிகை, 'கும்பலான ஆண் வில்லனின் மத்தியில் ஒரு பெண் வில்லியாக நடித்திருப்பது எனக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டணி சிறப்பான கூட்டணி, அத்தோடு இத்திரைப்படமும் சிறப்பான ஒன்றாக அமையும்' என மந்திரா கூறியுள்ளார்.
Tags: News, Hero, Star