சங்கமித்ராவினால் ஸ்ருதியை தாக்கும் குஷ்பு!
Posted on 18/07/2017

கடந்த சில மாதங்களுக்கு முன் சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகினார். அவர் விலகினார் என அவர் தரப்பும், நீக்கப்படார் என படக்குழு தரப்பும் கூறியது. தனக்கு திரை கதையே தரவில்லை என ஸ்ருதி ஹாசன் கூறியிருந்தார்.
இந்நிலையில் சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்பு இது குறித்து மறைமுகமாக தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். அதில் 'சங்கமித்ரா', இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்களில் மிக அதிக பொருட்செலவில் தயாராகும் படம். அது சரியான திட்டமிடுதல் இல்லாமல் முடியாது. 'சங்கமித்ரா' திரைக்கதை முழுமையாக தயாராகவில்லை என சிலர் கூறுவதை கேட்கிறேன்.
கடந்த 2 வருடங்களாக வேலை நடைபெற்று வருகிறது. தொழில்முறையை பின்பற்றாதவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. 'சங்கமித்ரா' மாதிரியான படத்துக்கு படப்பிடிப்பு வேலை என்பது 30 சதவிதம் தான். 70 சதவீத வேலை படப்பிடிப்புக்கு முன்பே செய்யப்படுகிறது. தங்கள் குறைகளுக்கு மற்றவர்களை குறை சொல்வது ஏன்?. திராட்சை புளித்துவிட்டதா?.
ஒரு கௌரவமான பாரம்பரியத்தை தொடர்பவர்களிடமிருந்து இன்னும் கூட சிறுது தொழில்முறை அணுகுமுறையை எதிர்பார்க்கிறேன். உங்கள் சொந்தத் தவறுகளை பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்வது உங்களது எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்.