சம்பளத்தை உயர்த்தினாரா நடிகை ஆண்ட்ரியா - வெளிவந்த தகவல்!
Posted on 13/07/2022

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், தனி காணப்படுவார்.
இவர் கைவசம் தற்போது பிசாசு 2, வட்டம், அணல்மேல பனித்துளி, கா, மாளிகை, நோ என்ட்ரி என ஆறு படங்களை வைத்துள்ளார்.
இதில் அதிகம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுவது மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படத்திற்காக தான்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா தற்போது தனது சம்பளத்தை 1.50 கோடியாக உயர்த்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரூ. 1 கோடி வரை வாங்கி வந்த ஆண்ட்ரியா, இனி நடிக்கவிருக்கும் படங்களுக்கு ரூ. 1.50 கோடி வாங்கப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
Tags: News