விமர்சனம் பற்றி கவலையே இல்லை! - ஆண்ட்ரியா
Posted on 18/08/2017

ஆண்ட்ரியா சமீபத்தில் வெளியான 'தரமணி' படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் ஒரு பையனுக்கு அம்மாவாக வருகிறார். சில காட்சிகளில் தம் அடிக்கிறார். தண்ணி அடிக்கிறார். இதில் துணிச்சலாக நடித்தது எப்படி? என்று அவரிடம் கேட்டபோது...
"என்னை பொறுத்தவரை கதாபாத்திரம் பிடித்திருந்தால் கவுரவம் பார்க்காமல் நடிப்பேன். 'தரமணி' கதை எனக்கு பிடித்து இருந்தது. எனவே தான் அந்த பாத்திரத்தில் மது குடிப்பது, சிகரெட் குடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னபோது மறுக்கவில்லை. துணிந்து நடித்தேன். அதுபற்றி விமர்சனங்கள் வந்தாலும் எனக்கு கவலை இல்லை. பாத்திரத்துக்கு பொருத்தமாக நடித்த திருப்தி இருக்கிறது.
அடுத்து, 'துப்பறிவாளன்', 'வடசென்னை' படங்களில் நடிக்கிறேன். இந்த படங்களிலும் எனக்கு வித்தியாசமான வேடங்கள் தான். மாறுபட்ட நடிப்பை காட்ட வாய்ப்புள்ள கதாபாத்திரங்கள் இவை.
குறிப்பாக 'வடசென்னை'யில் ஆண்ட்ரியாவா இது? என்று ஆச்சர்யப்பட வைக்கும் வேடம். அப்படி ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இதுபோன்ற மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை" என்றார்.
Tags: News, Hero, Star