ஜல்லிக்கட்டு வீரராக சேதுபதி
Posted on 10/01/2017

தமிழகம் முழுவதும் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உணர்வு பூர்வமான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் திருவிழாவிற்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் இந்த வருடம் ஜல்லிக்கட்டை நடத்தியே தீரவேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் உறுதியுடன் உள்ளனர். ஒருசில நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தவும் தயாராகி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கமல்ஹாசன், சூர்யா, ஹிப்ஹாப் தமிழா, சிம்பு, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் உள்பட பல திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் மாடுபிடிக்கும் வீரராக நடிக்கவுள்ளாராம். சமீபத்தில் 'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி 'கருப்பன்' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில்தான் விஜய்சேதுபதி ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜல்லிக்கட்டு குறித்த போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் விஜய்சேதுபதி குறித்த இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் உள்ளது.
Tags: News, Madurai News, Art and Culture