நடிகர் சிம்புவின் பத்து தல ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Posted on 01/07/2022

பத்து தல என்று பெயரிப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள பத்துதல படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
2017-ம் ஆண்டு கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் முஃப்தி. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கையும் நரதன் இயக்கி வந்தார். தொடர்ந்து தாமதமானதால் தனது அடுத்த படத்தில் பிஸியானார் நரதன். இதனால் முஃப்தி தமிழ் ரீமேக் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ‘பத்து தல’ என்று பெயரிப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் பத்துதல திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டூடியோ க்ரீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பத்துதல திரைப்படம் டிசம்பர் மாதம்14ந் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.
Tags: News