நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் 'வீட்ல விசேஷங்க'!
Posted on 01/03/2021

நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி ஹிந்தியில் வெளியான 'பதாய் ஹோ' என்ற படத்தை தமிழில் 'வீட்ல விசேஷங்க' என்ற பெயரில் ரீமேக் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
காமெடி நடிகராக தமிழ் திரை உலகில் அறிமுகமாகி, குணச்சித்திர நடிகராக உயர்ந்து, அதன் பிறகு 'எல்.கே.ஜி' என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக வளர்ச்சி அடைந்தவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நாயகனாக நடித்து இயக்கியிருந்தார். தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்க தீர்மானித்த இவர், தற்போது ஹிந்தியில் நடிகர் அயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'பதாய் ஹோ' என்ற படத்தின் படத்தினை தமிழில் ரீமேக் செய்து கதையின் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, படத்திற்கு 'வீட்ல விசேஷங்க' என்ற தலைப்பை வைக்கவிருப்பதாகவும், இதுதொடர்பாக இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களை சந்தித்து விரைவில் பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.
'மூக்குத்தி அம்மன்' படத்திற்கு திரைக்கதை அமைத்த ஆர்.ஜே.பாலாஜி, அதற்கு பாரிய அளவில் ரசிகர்களிடத்தில் வரவேற்பு கிடைக்காததால், தன்னுடைய திரையுலக பயணத்தை தொடர்வதற்காக ஹிந்தியில் வெளியான படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் என்று திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.