நிவின் பாலியின் ஃபேவரைட் ஹீரோ இவர்தானாம்!
Posted on 25/11/2017

மலையாள நடிகர் நிவின் பாலிக்கு தமிழகத்தில் பயங்கர வரவேற்பு இருக்கிறது. அவர் நடித்த 'ப்ரேமம்' படத்தின் மூலம் பலருக்கும் மனம் கவர்ந்த நாயகனாகி விட்டார் நிவின் பாலி. ப்ரேமம் படத்திற்குப் பிறகு தமிழ் ரசிகர்களால் அதிகமாகக் கொண்டாடப்படுகிறார் நிவின் பாலி. இவர் ஏற்கெனவே 'நேரம்' தமிழ்ப் படத்தில் நஸ்ரியாவோடு நடித்திருக்கிறார்.
தற்போது நிவின் பாலி ஹீரோவாக நடித்திருக்கும் 'ரிச்சி' திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. தமிழில் முக்கிய இடத்தைப் பிடிப்பதற்காக நிவின் பாலி இந்தப் படத்தை அதிகமாக எதிர்பார்த்து வருகிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. டிசம்பர் 8-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் நிவின் பாலி தனக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என்பதைச் சொல்லி இருக்கிறார்.
உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என நிவின் பாலியிடம் கேட்கப்பட்டதற்கு, தமிழில் தனக்கு பிடித்த ஹீரோ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எனவும், அவர் நடித்த 'தளபதி' படம் தனது ஃபேவரிட் தமிழ்ப் படம் எனவும் கூறியிருக்கிறார் நிவின் பாலி.
Tags: News, Hero, Star