திரு. அஜீத்துக்கு வாழ்த்துக்கள் டுவிட்டிய கமல்ஹாஸன்!
Posted on 23/08/2017

அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகியுள்ள 'விவேகம்' படத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இளைய மகள் அக்ஷரா மீது தனி பாசம் வைத்திருக்கும் கமல்ஹாசன் தற்போது அவருடன் 'விவேகம்' படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து கமல்ஹாசன் டிவிட்டரில் சற்று முன் பதிவிட்டிருப்பதாவது, 'விவேகம்' படத்தைத் தற்போது மகள் அக்ஷராவுடன் பார்த்து வருகிறேன், எதிர்பார்ப்புடன், நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்," என பதிவிட்டுள்ளார். அஜித்தை கமல்ஹாசன் திரு. அஜித் என சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Hero, Star