திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் மகள் திருமணம்
Posted on 31/01/2017

திரையுலகில் 38 ஆண்டு காலமாக நடித்துக் கொண்டிருப்பவர் வாகை சந்திரசேகர். 300 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் 2003 ம் ஆண்டு “ நண்பா நண்பா “ திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளராக பணியாற்றினார். தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளராக பணியாற்றி உள்ளார். தற்போது வேளச்சேரி சட்டப் பேரவை தி.மு.க உறுபினராக பணியாற்றி வருகிறார் வாகைசந்திரசேகர்.
இவருடைய மனைவி K.C.ஜெகதா சந்திரசேகர் தம்பதியருக்கு இரட்டைப் பிள்ளைகள் மகன் J.C.சிவவர்ஷன், மகள் J.C.சிவநந்தினி.
மகள் J.C. சிவநந்தினிக்கும், பழனி சித்தநாதன் அன் சன்ஸ் பேரனும் S.G.ரவீந்திரன் – R.சாந்தியின் மகன் R.தினேஷ் குமாருக்கும் 02.02.2017 அன்று பழனியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் தி.மு.க செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது. சித்தநாதன் அன் சன்ஸ் விபூதிக்கும், பஞ்சாமிர்ததிற்கும் புகழ் பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண வரவேற்பு 14.02.2017 அன்று சென்னையில் உள்ள மேயர் ஸ்ரீ ராமநாதன் சென்டர் வள்ளியம்மை ஹாலில் நடைபெற உள்ளது.
வாகை சந்திரசேகர் இல்ல திருமணத்திற்கும், வரவேற்புக்கும் ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள், கலையுலக பிரமுகர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளார்கள். திருமண ஏற்பாடுகளை தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் I.பெரியசாமி, தி.மு.க சட்டப்பேரவை கொறடா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சக்ரபாணி, பழனி சட்டப்பேரவை உறுப்பினர் I.P.செந்தில் மற்றும் நிர்வாகிகள், இருவீட்டு குடும்பத்தாரும் கவனித்து வருகிறார்கள்.
Tags: News, Hero, Lifestyle, Star