93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா!
Posted on 17/03/2021

வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர்.
93வது ஆஸ்கர் விருதுக்கான படங்களின் பரிந்துரைகள் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன.இந்திய நேரப்படி வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 முதல் 8.30 மணி வரை ஆஸ்கர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த முறை விழா வழக்கம் போல நடத்தப்பட்டாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இருப்பினும் நேரலையாக ஆஸ்கர் நிகழ்ச்சிகளை சமூக ஊடகங்கள் வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.